அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Tuesday, May 11, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்காலிக பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள் அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமானமையங்கள் உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப் படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை நியமிக்கும். அதன்படி, பல்கலைக் கழகத்தில் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தில் 15 உ தவி யாளர் பணியிடங்கள் உட்பட பிற மையங்களில் 23 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகக் கல்லூரிகளான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு உதவியாளர் பணியிடமும், சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் 4 உதவியாளர் பணியிடங்களும், நாகர்கோவிலில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் ஒரு இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கடைசி தேதி, தகுதி உள்ளிட்ட விவரங்கள் https://www.anrauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment