மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - துளிர்கல்வி

Latest

Wednesday, May 26, 2021

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

தாழ்வழுத்த மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மின்கட்டணம் செலுத்த மே 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின்கட்டணம் செலுத்தவும், ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகள் தாமதக் கட்டணத்துடன் மின் கட்டணம் செலுத்தவும் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறு,குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்தவும் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment