தெரிந்து கொள்வோம் : விவசாயத்தை காக்கும் வழி - துளிர்கல்வி

Latest

Tuesday, May 11, 2021

தெரிந்து கொள்வோம் : விவசாயத்தை காக்கும் வழி

விவசாய பணிக்காக ஊருக்குள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது, தற்சார்புடன் திகழ்ந்த நிலம் சார்ந்த வாழ்க்கை முறை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டுக் கிராமங்களில் நிலவி வந்துள்ளது. இந்த வாழ்க்கை முறையைச் சிதைத்து உழவரையும் தொழிலாளிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை பல சந்தைச் சக்திகள் கையாண்டுள்ளன. 


இந்தியாவில் உள்ள விளை நிலங்களில் விதை, டிராக்டர், டீசல், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றுக்குச் செலவிடும் மொத்தத் தொகை குறைந்தபட்சமாக ஏக்கருக்கு 3 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கொண்டால்கூட இந்தச் சந்தையின் வருட மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கோடியாகும். இச்சந்தையின் வலிமையும், சுரண்டலும்தான் உழவனின் வறுமைக்கும், தற்கொலைக்கும் உண்மைக் காரணம். 

MUST READ 

உணவுப் பண்டங்களை மக்களுக்கு விற்ற உழவன், இப்போது ராட்சத உணவு தொழிற்சாலைகளுக்கு கச்சாப் பொருளை விற்கிறான். தொழில் என்பது எப்போதுமே தன் கச்சாப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க முயல்வது. அதனால், உழவனுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை எப்போதும் குறைவாகவே உள்ளது. உழவு தொழிலாளர்களுக்கு இலவச அரிசி, பருப்பு, 100 நாள் வேலைத்திட்டம் என வாரி கொடுக்கும் போக்கினால் உழவு தொழிலாளர்கள் உழைக்காமலேயே உயிர் வாழும் நிலை வந்து விட்டது. 

இதனால் உழவர்கள் உற்பத்திக்கு இயந்திரங்களை சார வேண்டியுள்ளது. கடுமையான உணவு விலையேற்றத்துக்கு இதுவே மூல காரணம். இவை எல்லாவற்றையும்விட, உலகுக்கு உணவு தரும் உழவை மதிக்காமல் வளர்ச்சி, நகரமய மாக்கல் என்று உழவை மட்டம் தட்டுவதும், தொழில்நுட்பம் மட்டுமே உழவைக் காக்கும் என்று அடிப்படை புரிதலற்று பேசுவதும், தங்களுடைய அடிப்படை வாழ்வாதாரத்தின் மேல் கிராம மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை முற்றிலும் தகர்க்கின்றன. 

MUST READ 

இந்தியா போன்ற வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கு தொழில்நுட்பம் ஒரு மருந்தாக இருக்க வேண்டும், உணவாக அல்ல. இதற்கு தீர்வு, எல்ேலாருக்கும் தெரிந்ததுதான், எளிமையானதுதான். ஆனால், எல்லா மருந்துகளையும் போலவே கடைபிடிக்க கடினமானது. இயற்கை வேளாண்மையை தீவிரமாக பரப்புதல், உழவிலும், உணவிலும் அன்னிய முதலீட்டை தடை செய்தல், வேளாண்மையை அடிப்படையாக கொண்ட கிராமங்களில் அரசின் இலவசங்களை நிறுத்துதல், மானியங்களை ஒழித்தல், உணவு இறக்குமதியை தடை செய்தல், ஊழலற்ற நிர்வாகம் ஆகியவையே. இவற்றை செய்தால் உலகுக்கு உணவு தரும் உழவும், உழவனும் நன்கு வாழ்வார்கள்.

No comments:

Post a Comment