//மின்னஞ்சல்வாயிலாக //
அனுப்புநர்
முனைவர். திரு. வி.சி. இராமேஸ்வரமுருகன்
இயக்குநர்,
பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர்
கல்வி இயக்ககம் சென்னை-06.
பெறுநர்
மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்,
அனைத்து மாவட்டங்கள்
ந.க.எண். 743 /ஆ2/2020, நாள்: 11.05.2021
பொருள்
பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர் கல்விஇயக்ககம், சென்னை-06 கற்போம்
எழுதுவோம் இயக்கம் 2020-2021 - திட்ட நிதி நிருவாக மேலாண்மையைச்
செயல்பாடுகள் 16.05.2021 அன்று நடத்திட திட்டமிடப்பட்ட கற்போருக்கான
அடைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவித்தல் - உரிய தொடர்
நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு
பார்வை
01. மத்திய அரசுகடிதம் எண் F.No.14-5/2020 - NLM -II, நாள் 08.12.2020.
02. இவ்வியக்கக கடித நக.எண்.743 /ஆ2/2020, நாள்: 25.02.2021
03. மத்திய அரசுகடிதம் எண் F.No.14-1/2021 – NLM -II, நாள் 18.03.2021
பார்வை 1-ல் காணும் கடிதத்தின் படி, தமிழகத்தில், 2020-2021ஆம் நிதியாண்டில்,
15வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாத 3.10 இலட்சம் பேருக்கு
அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் கற்போம் எழுதுவோம் இயக்கம், மத்திய மற்றும்
மாநில அரசுகளின் 60:40 என்கிற நிதிப்பங்களிப்பின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும்
சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் ஜீலை-2021 வரை மத்திய
அரசால் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பார்வை-3ல் காணும் மத்திய அரசின் கடிதத்தின் படி, இத்திட்டத்தின் கீழ் பயின்று
வருகின்ற கற்போருக்கு 16.05.2021 அன்று இறுதி அடைவுத் தேர்வு நடத்தப்பட
திட்டமிடப்பட்டது. தற்போது, கொரோணா தொற்று பரவலின் காரணமாக, இத்தேர்வினை
மறுதேதி குறிப்பிடாமல் மத்திய அரசினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு நடத்துதல்
சார்ந்த புதிய தேதி பின்னர் இவ்வியக்ககத்தினால் தெரிவிக்கப்படும்.
அது வரை, இத்தேர்விற்கென, மூடிய உறையில் வழங்கப்பட்ட வினா-விடைத் தாள்கட்டுகள், வருகைப் பதிவுப் படிவம், தேர்வு நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பேனா ஆகியன தங்கள் மாவட்ட அலுவலகத்திற்கு இவ்வியக்ககத்தினால் வழங்கப்பட்டுள்ளது.இவை அனைத்தையும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் வகையில் உள்ள ஒரு அறையில் வைத்து, இரு பூட்டு முறையில் சீலிட்டு,மந்தனத்துடன், மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரைமுன்குறிப்பிடப்பட்டுள்ள அறையினை எக்காரணங்கொண்டும் திறக்கக் கூடாது. கற்போம் எழுதுவோம் இயக்ககத்தின் கீழ், கற்போருக்கு இறுதி அடைவுத் தேர்வினைநடத்துதல் சார்ந்து இவ்வியக்கத்தின் மறு அறிவிப்பு வரும் வரை முன் குறிப்பிடப்பட்டுள்ள மூடிய
உறையில் வழங்கப்பட்ட வினா-விடைத் தாள் கட்டுகள், வருகைப் பதிவுப் படிவம், தேர்வு
நடத்துதல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பேனா ஆகியனவற்றில் எவ்வித
சேதாரமும் ஏற்படாத வகையில் முன்குறிப்பிடப்பட்டுள்ள படி மிகவும் பாதுகாப்பாக வைத்திட
உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிட அனைத்து முதன்மைக் கல்வி
அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கற்போம் எழுதுவோம் இயக்ககத்தின் கீழ் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்ற
கற்போர்கள் அனைவரும் அவர்களுக்கேதுவான நேரத்தில், கல்வி தொலைக்காட்சி
(தினந்தோறும் மாலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை) அல்லது வீட்டுவழிக் கல்வி ஆகிய
ஏதாவதொரு நிலையில் தொடர்ந்து பயின்றிடும் வகையில் கற்போரை ஊக்குவிக்கவும், இதற்கு
உறுதுணையாக அந்நதந்த தன்னார்வல ஆசிரியர்களின் மதிப்புமிகு சேவைகளை உரிய
வகையில் தொடர்ந்து பயன்படுத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒம்/-
இயக்குநர்
பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர்கல்வி இயக்ககம்
சென்னை-06.
No comments:
Post a Comment