வனச்சரகர் பதவி உயர்வு: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 27, 2021

வனச்சரகர் பதவி உயர்வு: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

வனச்சரகர் பதவி உயர்வு: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


வனச்சரகர் பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வனச்சரகர் பணியிடங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காலியாக உள்ள நிலையில், வனக்காப்பாளர்களுக்கு வனச்சரகர் பதவி உயர்வு வழங்குவது தாமதப்படுத்தப்படுகிறது. 


பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு 10 மாதங்களாகி யும் நடைமுறைப்படுத்தவில்லை. வனக் காப்பாளர்கள் பலருக்கு 16 ஆண்டுகளில் கிடைத்திருக்க வேண்டிய 2-வது பதவி உயர்வு 21 ஆண்டுகளாகியும் இன்னும் வழங்கப்படாதது சமூக அநீதி. எனவே, வனச் சரகர் பதவி உயர்வை உடனே வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.