பொதுப்பணி, நீர்வள துறையில் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு - துளிர்கல்வி

Latest

Friday, June 4, 2021

பொதுப்பணி, நீர்வள துறையில் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு

பொதுப்பணி, நீர்வள துறையில் காலி பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு 

பொதுப்பணி மற்றும் நீர்வள துறையில் பதவி உயர்வு தாமதத்தால், காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஏற்பாடு நடக்கிறது. பொதுப்பணி துறையில் கட்டடங்கள், நீர்வள துறை என, முக்கிய பிரிவுகள் இருந்தன. இதில் நீர்வள துறையை தனியாக பிரித்து, புதிய துறையை அரசு உருவாக்கி உள்ளது. நியமனம் இதற்கு அமைச்சர், செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இதுவரை பொதுப்பணி துறையில் கட்டடங்கள் பிரிவில் பணியாற்றிய பொறியாளர்கள், நீர்வள துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பதவி உயர்வின் போது, ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுக்கும் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது நீர்வள துறை தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால், அதற்கென தனி கட்டமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொதுப்பணி துறையில் உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், தலைமை பொறியாளர் உள்ளிட்ட, பல்வேறு முக்கியமான பணியிடங்கள் உள்ளன. பல பொறியாளர்கள், கூடுதல் பணிகளை கவனித்து வருகின்றனர். ஊரடங்கால் பொதுப்பணி துறை, நீர்வள துறையில் பெரும்பாலான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 

எதிர்பார்ப்பு

மருத்துவ கல்லுாரி கட்டுமானம், கொள்ளிடத்தில் கதவணை கட்டுமானம், டெல்டா மாவட்ட நீர்வழித் தடங்கள் துார் வாருதல் உள்ளிட்ட, முக்கியமான பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. 

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன், அனைத்து பணிகளும் துவங்க வாய்ப்பு உள்ளது. அப்போது, உரிய பொறியாளர்கள் இல்லாவிட்டால், இப்பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்படும். இதை கருதி, பொதுப்பணி துறை மற்றும் நீர்வள துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முந்தைய ஆட்சியை போல பரிந்துரைகள் இல்லாமல் பணியிடங்களை நிரப்ப, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். SOURCE NEWS

No comments:

Post a Comment