தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள் - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, June 27, 2021

தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்கஆர்வம் காட்டும் அரசு பள்ளி மாணவர்கள்

தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற் பதில் மதுரை மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. 


ஆண்டுதோறும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக தேசிய திற னாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. "அப்ஜக்டிவ்" (கொள்குறி வகை வினா) முறையில் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றிபெறும் மாண வர்கள், 9 முதல் பிளஸ் 2 வரை 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு கல்வி உதவித் தொகை (ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம்) பெற முடியும். இதனால் இத்தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். 

அதற்கான முன்னெடுப்பை ஆசிரியர்கள் மேற் கொண்டிருப்பதை கல்வியாளர்கள் பாராட்டுகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 240 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 269 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதில் மதுரை மாவட்டம், பேரையூர் பெரியபூலாம்பட்டி முத்துநாகையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் பயின்ற மாணவி தாரணி தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இத்தேர்வில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்ச்சி பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்று பள்ளித் தலைமை ஆசிரியர் வ.நாகரத்தினம் தெரிவித்தார். கரோனா ஊரடங்கால் கடந்த ஒன்றரை ஆண்டுகள் பள்ளிகள் செயல்படாமல் இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி ஆன்லைன் மூலம் படித்து தேர் வில் தேர்ச்சி அடைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.