முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘இனி-செட்' தேர்வை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, June 12, 2021

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘இனி-செட்' தேர்வை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஜூன் 16-ந்தேதி நடத்த திட்டமிட்டது தன்னிச்சையான போக்கு என்றும், இந்தத் தேர்வை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க எய்ம்சுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

 இனிசெட் தேர்வு மத்திய அரசால் நடத்தப்படும் எய்ம்ஸ், புதுச்சேரி ஜிப்மர், பெங்களூரு நிம்ஹான்ஸ், சண்டிகர் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். உள்ளிட்ட கல்லூரிகளில், முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு இனி-செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 850 இடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் மருத்துவர்கள் எழுதுகின்றனர். இதுதொடர்பாக பவுலமி மண்டல் உள்ளிட்ட 35 மருத்துவர்கள் தொடர்ந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அரவிந்த் தத்தர் ஆஜராகி, கொரோனா தடுப்பு பணிகளில் டாக்டர்கள் ஈடுபட வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். மேலும் நீட் தேர்வுகள் தள்ளி வைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இதன்படி மே மாதத்தில் நடைபெற வேண்டிய நீட் தேர்வு ஆகஸ்டு மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுபோல இனி-செட்(INI-CET)' நுழைவுத் தேர்வையும் தள்ளிவைக்க வேண்டும்.

 கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட டாக்டர்கள் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர். திடீரென விலக முடியாது. முதுநிலை நீட் தேர்வுடன் இனி-செட்(INI-CET)' நுழைவுத் தேர்வையும் சேர்த்து நடத்த வேண்டும் என வாதிட்டார். ஒரு மாதம் தள்ளிவைப்பு இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் பராசர், இனி-செட்(INI-CET)' நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. ஜூன் மாத தேர்வை எழுதுவதில் சிக்கல் இருந்தால் அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்வை எழுதலாம். நாட்டில் கொரோனா பாதிப்பு சூழல் சீராகியுள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்றார். 

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதிகள், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘இனி-செட்(INI-CET)' நுழைவுத் தேர்வை ஜூன் 16-ந்தேதி நடத்த திட்டமிட்டது தன்னிச்சையான போக்கு என்றும், அந்த அறிவிக்கையை ரத்து செய்கிறோம். இந்தத் தேர்வை ஜூன் 16-ந்தேதியிலிருந்து ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்க எய்ம்சுக்கு உத்தரவிட்டனர். முதுநிலை மருத்துவ இறுதியாண்டு தேர்வு இதுபோல முதுநிலை மருத்துவ இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யக் கோரி சசிதர் உள்ளிட்ட 29 மருத்துவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இதே அமர்வு, முதுநிலை மருத்துவ இறுதியாண்டு தேர்வை எழுதாத மருத்துவர்கள் எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என வினவியதுடன், கோரிக்கையையும் நிராகரித்தனர். மேலும், மனுதாரர்களை மூத்த உள்ளுறை மருத்துவர்களாக பதவி உயர்த்தும் கோரிக்கை தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் 18-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.