சி.ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, July 24, 2021

சி.ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு தமிழகத்தில் கடந்த 19-ந்தேதியன்று பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

தற்போது இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் (சி.ஐ.எஸ்.சி.இ.) 10 (ஐ.சி.எஸ்.இ.) மற்றும் 12-ம் (ஐ.எஸ்.சி.) வகுப்பு பொதுத் தேர்வு முடிவை கணக்கிட்டு அதற்கான பணிகளை நிறைவு செய்திருந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) தேர்வு முடிவை வெளியிட இருப்பதாக நேற்று அறிவித்தது. அதன்படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு முடிவு வெளியாகிறது. அதன்படி, மாணவர்கள் www.cisce.org, www.results.cisce.org என்ற இணையதளங்களில் சென்று தங்களுடைய மதிப்பெண்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.