30 வினாடியில் 145 'கிக்' - ThulirKalvi

Latest

Search Here!

Monday, July 26, 2021

30 வினாடியில் 145 'கிக்'

30 வினாடியில் 145 'கிக்' செய்து, 'ஏசியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்' புத்தகத்தில் இடம் பிடித்து, கோவை மாணவி யஷ்வி மந்திரி, சாதனை படைத்துள்ளார். கோவை, ஓணாம்பாளையம், டில்லி பப்ளிக் பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் யஷ்வி மந்திரி. இவர் கடந்த, 10 பத்து ஆண்டுகளுக்கு மேலாக, கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மாநில அளவிலான போட்டிகளில், பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ளார். இவர் ஒரு காலில் நின்றவாறு, 30 நிமிடங்களில், 145 'மார்ஷியல் ஆர்ட்ஸ் 'கிக்' செய்து சாதனை படைத்துள்ளார். 




இந்த சாதனை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர், பாராட்டு தெரிவித்தனர்.சாதனை மாணவி யஷ்வி மந்திரி கூறுகையில், ''கடந்த பத்து வருடங்களாக, கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். கடந்த ஜூன் மாதம், 30 நிமிடத்தில், 145 'கிக்' செய்த வீடியோவை, ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு அனுப்பினேன். முந்தைய சாதனையை முறியடித்த காரணத்தினால், இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது,'' என்றார்.