மீன்வள பல்கலை.யில் சான்றிதழ் படிப்புக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Thursday, July 22, 2021

மீன்வள பல்கலை.யில் சான்றிதழ் படிப்புக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

மீன்வள பல்கலை.யில் சான்றிதழ் படிப்புக்கு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் 

சென்னை மீன்வள பல்கலை. துணைவேந்தர் சுகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகத்தில் திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி மூலம் நன்னீர் மீன், அலங்கார மீன் வளர்ப்பு, மதிப்பூட்டிய மீன்பொருட்கள் தயாரிப்பு ஆகிய பிரிவில் 6 மாதகால சான்றிதழ் படிப்புகள் நடத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் www.tnjfu.ac.in-ல் இருந்து விண்ணப்பத்தை பதி விறக்கம் செய்து பூர்த்தி செய்து, விரிவாக்கக்கல்வி இயக்குநர், தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், வெட்டாறு நதிக் கரை வளாகம், நாகப்பட்டினம் - 611002 என்ற முகவரிக்கு வரும் 30-ம் தேதிக்குள் நேரிலோ அல்லதுதபால்மூலமாகவோ சமர்ப்பிக்கவேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment