ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றப் போட்டிகள் - 31.07.2021 க்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய இணை இயக்குநர் உத்தரவு!!! - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, July 24, 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றப் போட்டிகள் - 31.07.2021 க்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய இணை இயக்குநர் உத்தரவு!!!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இளைஞர் மற்றும் சுற்றுச் சூழல் சார் மன்றப் போட்டிகள் - 31.07.2021 க்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய இணை இயக்குநர் உத்தரவு!!! 

 Tamil Nadu State Mission of Education for All 

“அனைவரும் கற்போம்” “அனைவரும் உயர்வோம்” 

அனுப்புநர்                                                      பெறுநர் 
இணை இயக்குநர்,       
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநில திட்ட இயக்ககம், 
டி.பி.ஐ. வளாகம், 
சென்னை - 600 006.

 பெறுநர் 
முதன்மைக் கல்வி அலுவலர், 
அனைத்து மாவட்டங்கள் 


பொருள்: 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21- இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் - குறுவள மைய அளவில் போட்டிகள் சார்ந்த விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் - சார்பு. 

பார்வை: 

16.04.2021 மற்றும் 08.07.2021 அனுப்பிய மின்னஞ்சல் 606/C6/SS/2020 நாள்: 23.07.2021 

2020 - 21 ஆம் ஆண்டிற்கான இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் செயல்பாடுகள் சார்ந்து கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குமாறும் மேற்படி நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

EMIS தளத்தில் போட்டிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் பணியினை 16.07.2021 - க்குள் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மாவட்டங்களில் இப்பணியினை விரைவில் முழுமைப்படுத்தும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களில் EMIS தளத்தில் முடிவுகள் (Report) பார்க்கும் படி தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து முடிக்க தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி, 31.07.2021 - க்குள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். DOWNLOAD AS PDF