எம்.எட்., செய்முறை தேர்வு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Wednesday, July 14, 2021

எம்.எட்., செய்முறை தேர்வு அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு: அனைத்து கல்வியியல் கல்லுாரிகளில், எம்.எட்., படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் செய்முறை தேர்வு நடத்தப்படும். 


இந்த தேர்வு, வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கும். ஒவ்வொரு கல்லுாரிக்கான தேர்வாளரை, பல்கலையே நியமிக்கும். ஆன்லைன் வழி தேர்வில், தேர்வாளர், மாணவர், கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி முதல்வர் இடம் பெற வேண்டும். 


 தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களை மட்டுமே, செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். மதிப்பெண் விகிதம், 90 சதவீதத்துக்கு மேல் இருந்தால், மறு செய்முறை தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment