அடுத்த மாதம் நாட்டா தேர்வு - துளிர்கல்வி

Latest

Tuesday, July 13, 2021

அடுத்த மாதம் நாட்டா தேர்வு

கட்டட கலை படிப்புக்கான நாட்டா நுழைவுத் தேர்வு, அடுத்த மாதம் மீண்டும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் டிப்ளமா முடித்தவர்கள், கட்டட கலைக்கான, பி.ஆர்க்., படிக்க, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நாட்டா தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. நாடு முழுவதும், 248 மையங்களில், 25 ஆயிரத்து 860 பேர் பங்கேற்றனர். இந்நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளை தவறவிட்டோ ருக்காக, அடுத்த மாதம் மீண்டும் நாட்டா தேர்வு நடத்தப்படும் என, ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை, www.nata.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment