ICT Training - மாவட்டக் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, July 24, 2021

ICT Training - மாவட்டக் கருத்தாளர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-06. 

ந.க.எண். 22432/விவ/இ1/2021, நாள் : 22.07.2021 

பொருள்: 

பள்ளிக்கல்வி - தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளித்தல் - மாவட்டக் கருத்தாளர்களுக்கு மாநில கருத்தாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்தல் - சார்ந்து. 

பார்வை: 

மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் செயல்முறைகள் கடித ந.க.எண். 3363 /ஈ2/2021, நாள்22.07.2021. 



கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆசிரியர்கள் மேற்கொள்ள அடிப்படை கணினி பயன்படுத்துதல், EMIS, High Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சிக்குத் தேவையான கட்டகம், காணொலிகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு உயர் தொழில் நுட்ப ஆய்வகம் வழியாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, 

மாவட்டக் கருத்தாளர்களுக்கான மாதிரிப் பயிற்சி 23.07.2021 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் கணினி பயிற்றுநர்கள் தவறாது தங்கள் பள்ளியில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்திலுள்ள கணினிகளை இயங்கும் நிலையில் வைத்து சரிபார்க்க வேண்டும். 
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் Zoom / Google Meet ID | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் முதல்வர் மூலம் அனுப்பிவைக்கப்படும். அந்த ID-யைத் தங்கள் மாவட்டத்திலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும். பள்ளித் தலைமையாசிரியர்கள் அந்த ID-யைக் கொண்டு இணையவழி காணொலி பயிற்சியில் இணைய வேண்டும்.