மாணவர்களுக்கு உணவு வழங்க அங்கன்வாடி மையங்களை திறக்க முடிவு ஐகோர்ட்டில் அரசு தகவல் - துளிர்கல்வி

Latest

Thursday, August 5, 2021

மாணவர்களுக்கு உணவு வழங்க அங்கன்வாடி மையங்களை திறக்க முடிவு ஐகோர்ட்டில் அரசு தகவல்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு கடிதத்தில், ‘‘தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அட்வகேட் ஜெனரல் நடத்திய கூட்டத்தில், 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்டு மதிய உணவு அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மற்ற மாணவர்களை பொறுத்தவரை, செப்டம்பர் 1-ந்தேதி முதல் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை வருகிற செப்டம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment