திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முறையாக பட்டம் பெற்றால் ‘மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போல செல்லும்’ பதிவாளர் அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Wednesday, August 4, 2021

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முறையாக பட்டம் பெற்றால் ‘மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போல செல்லும்’ பதிவாளர் அறிவிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்னகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில், அரசாணை எண்.107-ன்படி, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் அதாவது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடித்தபிறகு மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்தால் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போல செல்லுபடியாகும். அரசாணை 242-ன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு உடன் பெற்ற பட்டம் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும். 

மேலே குறிப்பிட்டுள்ளபடி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் அதாவது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படிப்புக்குப் பிறகு பெற்ற பட்டம் மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்பை போல செல்லுபடியாகும். இந்த செய்தி, மக்களுக்கு திறந்தநிலை கல்வி பற்றிய தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 முடித்து முறையாக பட்டம் படிக்கும், படித்து முடித்த மாணவர்களுக்கு திறந்தநிலை கல்வி மூலம் பெறப்படும் பட்டம் பற்றிய கேள்வியை நீக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment