கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல் - துளிர்கல்வி

Latest

Sunday, August 8, 2021

கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல்

(பணியாளர் தொகுதி)அவர்களின் செயல் முறைகள் ந.க.எண். 39671/ஜே/இ4/2021 நாள்: 04.08.2021. 

பொருள்: 

 கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோருதல் - கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோரி காத்திருப்பவர்கள் சார்பாக விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல்-தொடர்பாக. 

 பார்வை:

 1. அரசாணை (நிலை) எண்.18,தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (Q1)த்துறை, நாள். 23.01.2020. 

 2.பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) கடிதம் ந.க.எண்.65150/ஜே/இ4/2019 நாள்:14.11.2019 மற்றும் 14.07.2021. 

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அலுவலகங்கள் / பள்ளிகளில் உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 2020-2021ஆம் ஆண்டிற்கான உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டின்படி (25%) தொகுதி IV பணியிடமான இளநிலை உதவியாளர் ) பணிடங்களுக்கு பணியாளர் இறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப்பட்டியல் இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது. 14.07.2021 அன்று 2019-2020ம் ஆண்டுக்கு கருணை அடிப்படையில் 250 நபர்களுக்கு பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டதில் 17.11.2013 முடிய முன்னுரிமை(பணியில் இருக்கும்காலமான நாளினை அடிப்படையாகக்கொண்டு) அடிப்படையில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் 18.11.2013 முதல் டிசம்பர்- 2015 வரை காலமானவர்களின் வாரிசுதாரர்கள் சார்பாக கருணை அடிப்படையில் பணிவாய்ப்புக் கோரிகருத்துரு ஏதும் இதுவரை இவ்வலுவலகத்திற்கு அனுப்பாமல் மாவட்ட அளவில்நிலுவையில் இருந்தால் அந்த கோப்புகளை முழு அளவில் அதற்காக பராமரிக்கப்படும்பதிவேடுகள் மற்றும் பதிவேட்டின்படி அனுப்பப்பட்ட கருத்துருக்களின் பெயர்பட்டியலுடன் நேரில் கீழ்காணும் நாட்களில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும்தெரிவிக்கப்படுகிறது




No comments:

Post a Comment