மளிகைப் பொருட்களிலும் பணத்தை சேமிக்கலாம் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, September 13, 2021

மளிகைப் பொருட்களிலும் பணத்தை சேமிக்கலாம்



வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்தால் சேமிப்பு அதிகரிக்கும். 'பட்ஜெட்' போட்டு செயல்படும்போது, செலவுகளை எளிதாக குறைக்க முடியும். மளிகைப் பொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளைப் பின்பற்றினால், பணத்தை மிச்சப்படுத்தலாம். 

மளிகைப் பொருட்களை சிறுகச் சிறுக வாங்காமல், ஒரு மாதத்துக்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது. ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்கு வதற்கு முன்பு, பட்டியல் தயார் செய்வது அவசியமானது. சமையல் அறைக்குள் சென்று, என்னென்ன பொருள்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம். முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால், இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். 

அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்குத் தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிக்கொண்டு, மற்றவற்றைக் குறைத்துக் கொள்வது சிறந்தது. பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது, கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக் கொண்டிருக்காமல், முதலில் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே, மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும். 

பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப் பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும். மளிகைப் பொருட்களுக்கான பட்ஜெட் போடும் போது, காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்ற வற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும். ஷாப்பிங் செய்யும்போது 'தள்ளுபடி' என்ற வார்த் தையை பார்த்து மயங்காமல், அவசியமான பொருட் களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம். அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங் கினால் விலை குறைவாக இருக்கும். 

பணமும் மிச்ச மாகும். காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக் காமல், என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு, வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம். மளிகைப் பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு, குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள், தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப் பட்டியல் தயார் செய்யலாம். இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத் தினால், பெருமளவு செலவைக் குறைக்கலாம்.