102 மொழிகளில் திருக்குறள்: செம்மொழி நிறுவனம் முயற்சி
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருக்குறளை, 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளது.
சென்னை, தரமணியில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளை, பல மொழிகளில், மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.ஏற்கனவே, ஆங்கிலத்தில், 18 உரைகளுடன் செறிவடக்க பதிப்பாக வெளிவந்துள்ளது.
அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள, 21 மொழிகளில், ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. மேலும், 10 மொழிகளில் மொழிபெயர்க்கும் பணிகள் நடக்கின்றன.அதேபோல், இந்திய மற்றும் வெளிநாடு என, 22 மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டம் துவங்கியுள்ளது. மேலும், 88 மொழிகளில் மொழிபெயர்க்க தகுதியானவரை தேடும் வகையில், விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் கூறியதாவது: உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் பழமை இலக்கியங்களான, சங்க இலக்கியங்களை உலக மக்களிடம் சேர்க்கும் வகையில், மொழிபெயர்ப்பு பணிகள் தொடர்கின்றன. அதன் ஒருபகுதியாக, திருக்குறளை, 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டம் தொடர்ந்து நடக்கிறது. இது நிறைவுஅடைந்தால், தமிழர்களின் அறச்சிந்தனையை உலகம் வியக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment