தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு கணினி வழியில் நடத்தப்பட உள்ளது.
தேர்வுகள் 28ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடக்கும். இதற்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் நேற்று வெளியிட்டது. இந்த தேர்வுகள் காலை, மாலை என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளன. இதன்படி,
* கணினி அறிவியல், பிரிண்டிங் டெக்னாலஜி ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் 28ம் தேதி காலையிலும், இயற்பியல், தகவல் தொழில்நுட்பம், மார்டன் ஆபீஸ் பிராக்டீஸ் பாடங்களுக்கான தேர்வு மதியமும் நடக்கும்.
* கணக்கு, புரொடெக்ஷன் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு 29ம் தேதி காலையிலும், இஇஇ, டெக்ஸ்டைல் தொழில்நுட்ப பாடங்களுக்கு மதியமும் நடக்கும்.
* இன்ஸ்ட்ருமெட்ன்டேஷன் மற்றும் கன்ட்ரோல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு 30ம் தேதி காலையிலும், இசிஇ பாடத் தேர்வுகளுக்கு மதியமும் தேர்வு நடக்கும்.
* எம்இ பாடத் தேர்வு 31ம் தேதி காலையிலும், வேதியியல், ஆங்கில பாடங்களுக்கான தேர்வுகள் மதியமும் நடக்கும்.
No comments:
Post a Comment