தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையில் முதல் முறையாக கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு, தற்போதைய அனைத்து இடங்களும் ஜீரோ இடமாக அறிவித்து சீனியாரிட்டி முறை பின்பற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறு வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு வருகிற 18ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு சம்பந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் அல்லது அருகே உள்ள இடங்களில் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவில், பொதுமாறுதல் கலந்தாய்வை, எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்த வேண்டும். பயிற்றுனர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ல் இருக்கை, குடிநீர், கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment