தெற்கு ரயில்வேயில் டிச., மாதம் 'பென்ஷன் அதாலத்' நடைபெறும் நிலையில், வரும், 31ம் தேதிக்குள் குறைகள் வரவேற்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்கள், போத்தனுார் 'எஸ் அண்ட் டி' பணிமனை உள்ளிட்ட இடங்களில் டிச., 15ம் தேதி காலை, 10:30 முதல் மாலை, 5:00 மணி வரை, இணையவழி 'பென்ஷன் அதாலத்' நடக்கிறது.இதற்கென, ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை வரும், 31ம் தேதிக்கு முன்பு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் ரயில்வே கோட்டத்துக்கு, srdpo@sa.railnet.gov.in, போத்தனுார் 'எஸ் அண்ட் டி' பணிமனைக்கு, wpopti@sa.railnet.gov.in என்ற முகவரிக்கு குறைகள் அனுப்பிவைக்கலாம்.வரும், 31ம் தேதி அல்லது அதன் பிறகு அனுப்பிவைக்கப்படும் குறைகள் ஏற்கப்படாது.
No comments:
Post a Comment