ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, October 30, 2021

ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி

ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கு, சுற்றுச்சுவர் மற்றும் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கி அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலுார், மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலுார், ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 13 ஆதிதிராவிட நலப் பள்ளிகளுக்கு, நான்கு கோடி ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டப்படும். 

 தஞ்சாவூர் மாவட்டம், கண்ணந்தங்குடி, மேலையூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்க பள்ளியில், இரண்டு வகுப்பறை கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்; வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளி.பென்னாத்துார் தொடக்கப் பள்ளி ஆகியவற்றில் சுற்றுச்சுவர் கட்டப்படும் என்று, சட்டசபையில் மானிய கோரிக்கையின் போது, துறை அமைச்சர் கயல்விழி அறிவித்தார். 

 அதை செயல்படுத்த, 13 பள்ளிகளில் 3,950 மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சுவர் கட்ட 3.83 கோடி ரூபாய்; மற்ற பள்ளிகளுக்கு, 92.34 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.