ஆசிரியர்கள் - மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, November 25, 2021

ஆசிரியர்கள் - மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனை

பள்ளி மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசகர்கள் நியமிக் கப்படுவர் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி. 


இதுகுறித்து திருச்சியில் அவர் புதன்கி முமை மேலும் கூறியது: 

பள்ளிகளில் ஏற்ப டும் பாலியல் தொல்லைகள் குறித்தும், இது குறித்து மாணவிகளும், பெற்றோரும் புகார் தெரிவிக்கும் முறையை எளிதாக்கவும் திட்ட மிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417,1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களையும், அருகிலுள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது. பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாணவர்களுக்கும், ஆசிரி யர்களுக்கும் உளவியல் ரீதியாக ஆலோசனை தேவைப்படுகிறது. இதற்காக மாவட்டம்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர். 

சுழற்சி முறையில் இந்த ஆலோசனையை வழங்க மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பிரத்யேகமாக இயங்கும் 14417 என்ற புகார் மையத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும். மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் விருப்பம். பாதிக்கப் பட்ட மாணவ, மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 71 வட்சத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. 

அரசுப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்புகளைச் செய்து கொடுக்கிறோம். அரசுப் பள்ளிகளை நோக்கி வரும் மாணவர்களைத் தக்க வைப்பதே எங்களது விருப்பம். தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழுக் கட்டணம் செலுத்த வற்புறுத் தக் கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்றார். அமைச்சர்.