முடிக்கொட்டும் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !! - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, November 18, 2021

முடிக்கொட்டும் பிரச்சனைக்கு எளிதில் தீர்வு தரும் இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !!

வெந்தயத்தை அரைத்துத் தலையில் தடவிக் குளித்தால், தலை முடி பளபளப்பாகவும், கறுப்பாகவும், மென்மையாகவும் வளரும். 

ஒரு பிடி வேப்பிலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து மறுநாளும் வேக வைத்து, அந்த நீரைக் கொண்டு தலைமுடியை அலசி வந்தால், முடிகொட்டுவது நின்று விடும். பேன் இருந்தாலும் ஒழிந்து போகும். 

நரை முடி கொண்டவர்கள், இயற்கையான முறையில் நரை முடியைக் கறுப்பாக்கிக் கொள்ள விரும்புபவர்கள் அவுரி இலையையும், மருதாணி இலையையும் இடித்துத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டித் தலையில் தடவலாம். முடியின் நிறம் மாறும். தலைமுடி நன்கு வளர செவ்வந்திப்பூவை எண்ணெய்யில் கலந்து தடவி வரவேண்டும். 

கூந்தல் நரை மறைய வேண்டுமானால், தினமும் வெண் தாமரைப்பூ கஷாயம் செய்து, அரை டம்ளர் வீதம் 40 நாள்கள் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும். தேவையான அளவு மருதாணி இலைகளைப் பறித்து வந்து சுத்தம் செய்து, நன்கு அரைத்து தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால், தலைமுடி மிருதுவாக இருக்கும். உடல் சூடும் குறையும். 

நெல்லி இலையையும், இலந்தை இலையையும் மை போல் அரைத்து தலையில் தடவி பத்து நிமிடம் காயவிட்டு குளித்தால், தலைமுடி நரைப்பது நிற்கும். கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேவையான தேங்காய் எண்ணெய் யில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்து வந்தாலும் கூந்தல் செழித்து வளரும்.