சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும் அழகு குறிப்புகள் !! - துளிர்கல்வி

Latest

Friday, December 24, 2021

சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும் அழகு குறிப்புகள் !!

சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். தேங்காய் தண்ணீரைக் கொண்டு தினமும் இரண்டு முறை முகத்தை மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகத்தில் உள்ள தழும்புகள் கருமை நீங்கி முகம் பளிச்சென்று வெள்ளையாகும். 

 சரும ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்த மேற்கூறிய அழகு குறிப்புகளை செய்வதோடு தினசரி நாம் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். 

தண்ணீர் குடிப்பதோடு நல்ல தூக்கமும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இரவில் அதிக நேரம் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்குவது மிகவும் முக்கியம் ஆகும். நல்ல தூக்கம் இருந்தால் கண்களின் கீழ் உண்டாகும் கருவளையங்கள் ஏற்படமால் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment