மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதா வால்நட்...? - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, December 18, 2021

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறதா வால்நட்...?

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வால்நட் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வால்நட் சாப்பிடுவது நல்லது. வால்நட் சாப்பிடுவது உடலில் உணவு செரிமானத்தை சீராக நடைபெற உதவி செய்யக் கூடிய ஒன்றாகும்.

 மிகவும் வறண்ட சருமம் உடையவர்கள் வால்நட் சாப்பிட்டால் சருமத்தின் வறட்சி தன்மை நீங்கி ஈரப்பதம் உருவாகி சரும ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். வால்நட் பருப்பில் நிரம்பியுள்ள கால்சியம் சத்து உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. எனவே உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்க வால்நட்டை சாப்பிடுங்கள்

. சிலருக்கு உடலில் குறிப்பிட்ட விதமான அலர்ஜி இருக்கும். அலர்ஜியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் வால்நட் பருப்பை சாப்பிடுவது அந்த அலர்ஜியில் இருந்து விடுபட உதவும். வால்நட் பருப்பில் ஒமேகா 3 உள்ளிட்ட நல்ல கொழுப்பு சத்து அதிகம் உள்ளது

. உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைக்க இது உதவும். மேலும் மிகவும் ஒல்லியான உடல் உடையவர்கள் சற்று உடல் எடையை அதிகரிக்கவும் வால்நட் பருப்பு உதவுகிறது.

 ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் வால்நட் பயன்படுகிறது. எனவே ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வருவது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.