குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய பண்புகள்! - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, January 19, 2022

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய பண்புகள்!

உங்கள் குழந்தைகளை சில மணி நேரங்கள் தனித்து விட்டால் அவர்கள் தன்னைத்தானே கவனித்துக்கொள்வார்களா? நீங்கள் இல்லாத சூழ்நிலையில் அவர்களின் அன்றாட வேலைகளை அவர்களே செய்ய முடியுமா? குழந்தைப் பருவத்திலேயே சில விஷயங்களை தனியாக எதிர்கொள்ள பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளீர்களா? 

குழந்தை வளர்ப்பு என்பது வீட்டிலும் சமூகத்திலும் நேர்மறை/எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின் குணநலன்கள், அவர்களது நடவடிக்கைகள் பெரும்பாலாக பெற்றோரின் வளர்ப்பிலேயே இருக்கிறது. பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நல்ல பண்புகளை கற்றுக்கொடுக்க நினைக்கிறீர்கள். அதுபோல அறிவுரீதியான முக்கிய திறன்களையும் கற்றுக்கொடுக்க விழைகிறீர்கள். 

பள்ளிக் கல்வியைத் தாண்டி வாழ்க்கைக் கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்தவகையில் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:- 1. நேரத்தை நிர்வகித்தல் குழந்தைப் பருவத்தில் நேரத்தை நிர்வகித்து என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் சில பண்புகள் வேண்டுமெனில் அவற்றை இளம்வயதிலேயே கற்றுக்கொடுப்பது நல்லது. 

 நேரத்தை சரியாகப் பயன்படுத்தும் கலையை இக்காலத்தில் ஒவ்வொருவரும் பெற வேண்டும். நேரத்தின் அருமை தெரிந்தவர்கள் மட்டுமே அதனை உபயோகமாக கழிக்க முடியும். அந்த வகையில், குழந்தைகள் பலரும் காலையில் தாமதமாக எழுந்து பள்ளிக்கும் தாமதகமாக செல்வர். இல்லையெனில் நீங்கள் அவர்களை பலமுறை எழுப்ப வேண்டியிருக்கும்.