அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படும் சங்குப்பூ செடி !! All parts are medicinal conifers !! - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, January 18, 2022

அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படும் சங்குப்பூ செடி !! All parts are medicinal conifers !!

அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படும் சங்குப்பூ செடி !! All parts are medicinal conifers !! 

சங்குப் பூ செடியின் இலைகள், விதைகள், வேர்கள், பூக்கள் என அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுகிறது. சங்குப்பூவின் இலைகள் துவர்ப்பு சுவை கொண்டது. உடலுக்கு வெப்பத்தை தரக்கூடியது. சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகமாக உள்ளதாக நமது மருத்துவ முறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 சங்குப்பூ சங்கு புஷ்பம், மாமூலி, கன்னிக் கொடி, காக்கணம், காக்கரட்டான் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. சங்குப்பூ தமிழகமெங்கும் காடுகள் வேலிகள், தோட்டங்களில் இயற்கையாக வளர்கின்றது. அரைலிட்டர் தண்ணீரில் 40-முதல் 50- கிராம் அளவு சங்குப் பூ செடியின் வேர்களை போட்டு, நன்றாக கொதிக்க விட வேண்டும். கால் லிட்டராக தண்ணீர் வற்றிய பிறகு, மூன்று தேக்கரண்டி வீதம் இரண்டு மணிநேர இடைவெளியில் ஆறு வேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 

காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து , தீவிரம் குறைந்து விரைவில் குணமடையலாம். சங்குப் பூக்கள் சிறந்த சிறுநீர்பெருக்கியாகும். குடல் புழுக்களை கொல்லும். மூட்டுவலி, முடக்குவாதம், தலைவலி, தலைபாரம் மலச்சிக்கல் அஜீரண கோளாறுகளையும் குணமாக்குகிறது. நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும். 

.இரத்தக் குழாய் அடைப்புகளை சரி செய்ய, ஒரு டம்பளர் தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு, இரவு முழுவதும் ஊற விட வேண்டும். காலையில் வடிகட்டி குடித்து வர இரத்தக் குழாய் அடைப்புகள் குணமாகிறது.

The leaves, seeds, roots and flowers of the conifer are all used in medicine. The leaves of the conifer have an astringent taste. Can provide heat to the body. There are two common types of conifers: white flowers and blue flowers. It has been mentioned in our medical systems that the white flowering plant has great medicinal value.

Coneflower is also known by the names of Cone Flower, Common, Virgin Flag, Cockroach, Cockroach. Sanguppu grows naturally in forest fences and gardens all over Tamil Nadu. Put 40-50 g of conifer roots in a liter of water and bring to a boil. After drying a quarter liter of water, take three teaspoons six times at two-hour intervals.

The fever may subside a little and the severity may subside and heal quickly. Cone flowers are an excellent diuretic. Killing intestinal worms. It also cures joint pains, rheumatism, headaches, headaches, constipation and indigestion. Ginger powder mixed with ghee is given in a pinch of hot water to cure gastric ulcer in children.

Cone flowers repair blood vessel blockages. To fix the blood vessel blockages, put the cone flowers in a tumbler of water and let it soak overnight. Drinking filtered water in the morning heals blood vessel blockages.