பொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Monday, January 3, 2022

பொங்கல் போனஸ் அரசாணை வெளியீடு

அரசாணை (நிலை) எண்.1,நாள்: 01-01-2022 (பிலவ, மார்கழி 17, திருவள்ளுவர் ஆண்டு 2052 சுருக்கம் 2020-21ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் -ஒப்பளிப்பு ஆணை - வெளியிடப்படுகிறது. 

ஆணை 

முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து "C" மற்றும் "D" பிரிவு அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் காலமுறைச் சம்பளம் பெறும் ஆசிரியர்கள் ! பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில், ரூ.3,000/- என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு 2020-2021-ம் கணக்காண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1,000/- பொங்கல் பண்டிகை கொண்டாடிட ஏதுவாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 2 2020-2021ஆம் கணக்காண்டிற்கு "C" மற்றும் "D பிரிவு சார்ந்த, முறையான காலமுறைச் சம்பளம் பெறும் அனைத்து நிரந்தர மற்றும் தற்காலிக அரசுப் பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்! பணியாளர்கள் ஆகியோருக்கு திங்களொன்றுக்கு 30 நாட்கள் என்ற அடிப்படையில் ரூ.3,000/- என்ற உச்சவரம்பிற்கு உட்பட்டு தற்காலிக மிகை ஊதியமாக வழங்கிட அரசு ஆணையிடுகிறது. 3. 2020-2021-ஆம் கணக்காண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிலையான ஊதியம் பெற்று வந்த முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், தொகுப்பூதியம் / சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் / ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள்), கிராம உதவியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஒரு பகுதி தினக்கூலிகளாக த.பியா. 

 2 

பணியாற்றி பின்னர் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் ரூ.1,000/- வழங்கி அரசு ஆணையிடுகிறது. 4. இவ்வாறு அனுமதிக்கப்படும் தற்காலிக மிகை ஊதியமானது 31-03-2021-ஆம் நாளன்று உள்ள C மற்றும் *D" பிரிவு ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படவேண்டும். மாதாந்திர ஊதியம் ரூ.3,000/-என்பதை உச்சவரம்பாகக் கொண்டு, தற்காலிக மிகை ஊதியத்தொகை கணக்கிடப்படவேண்டும். திருத்திய சம்பள வீதத்திற்கு முந்தைய சம்பள வீதங்களில் திருத்திய சம்பள வீதங்களில் சம்பளம் பெறுபவர்களைப் பொறுத்தவரையில், திங்களொன்றுக்கு ரூ.3000/- என்ற உச்ச வரம்பிற்கு உட்பட்டு அவர்கள் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில், தற்காலிக மிகை ஊதியம் கணக்கிடப்படவேண்டும். 5. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக மிகை ஊதியம் , சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் இந்த அரசாணையின் இணைப்பில் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கத்தக்கதாகும். 6. தற்காலிக மிகை ஊதியம் , சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் குறித்த செலவினம் சம்பந்தப்பட்ட துறையின் தொடர்புடைய பணிக்கணக்குத் தலைப்பின் கீழ் "301. சம்பளங்கள் " என்ற நுணுக்கத் தலைப்பின் கீழ் வரும் 04, ஏனைய படிகள் " என்ற உள்நுணுக்கத் தலைப்பின் கீழ் அல்லது ''302. ஊடதியங்கள் " என்ற நுணுக்கத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்படவேண்டும். 

(ஆளுநரின் ஆணைப்படி) நா.முருகானந்தம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் 

பெறுநர் 

அனைத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முதன்மைச் செயலாளர், செயலாளர், சென்னை-9. செயலாளரி, சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9. காப்பாளர், ஆளுநர் மாளிகை, ராஜ்பவன், சென்னை-22. ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர், ராஜ்பவன், சென்னை-22 ஆளுநர் செயலகம் ராஜ்பவன், சென்னை-22. அனைத்துச் செயலகத் துறைகள் (அலுவலக நடைமுறை மற்றும் பட்டியல் பிரிவுகள்) நிதித்துறையிலுள்ள பிரிவுகள் அனைத்தும். அனைத்து துறைத் தலைவர்கள், மாநில தகவல் ஆணையம், எண்.2. தியாகராய சாலை. எல்டாம்ஸ்ரோடு சந்திப்பு, தேனாம்பேட்டை, சென்னை-15, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள். அனைத்து மாவட்ட நீதிபதிகள் அனைத்து முதன்மை நீதித்துறை மாஜிஸ்டிரேட்கள். முதன்மை மாநில கணக்குத் துறைத் தலைவர் (கணக்குகள் மற்றும் உரிமைத் தொகை சென்னை-18. மாநில கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை-1), சென்னை-18. மாநில கணக்குத் துறைத் தலைவர் (தணிக்கை-11), சென்னை -18, மாநில கணக்குத் துறைத் தலைவர் (உதபி), சென்னை-9; மதுரை, DOWNLOAD THIS FILE AS PDF