வாய்வு தொல்லைக்கு நல்ல நிவாரணம் தரும் ஓமம் !! - ThulirKalvi

Latest

Search Here!

Friday, January 21, 2022

வாய்வு தொல்லைக்கு நல்ல நிவாரணம் தரும் ஓமம் !!

வாய்வு தொல்லைக்கு நல்ல நிவாரணம் தரும் ஓமம் !! வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது. இரண்டு டீஸ்பூன் ஓமத்தை எடுத்து லேசாக வறுத்து, பின் ஒரு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தண்ணீரில் ஓமத்தை நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்

. ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுரையீரலை சுத்தப்படுத்தவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்சனைக்கு ஓம தண்ணீர் நல்ல நிவாரணியாக இருக்கிறது.

 வயிறு வலி, இரப்பைக் குடல் பிரச்சனைகளுக்கும் ஓமம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒம வாட்டர் குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது. முடக்கு வாதம், அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கும் ஓமம் உதவுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதோடு இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் உதவுகிறது. ஓம தண்ணீரை மருந்து கடைகளில் வாங்கி குடிப்பதை விட, நீங்கள் வீட்டிலேயே செய்து பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.