DSE (சுற்றறிக்கை-3) - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு. - துளிர்கல்வி

Latest

Saturday, January 8, 2022

DSE (சுற்றறிக்கை-3) - 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

சுற்றறிக்கை-3 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் சென்னை 6 ந.க.எண். 25154/அ/82/2021 நாள். 08.01.2022 

பொருள்: 

பள்ளிக் கல்வி 2021-22ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் சார்பான விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் சார்பு. 

பார்வை: 

பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் இதே எண்ணிட்ட நாள் 30.12.2021,6.1.2022 மற்றும் 7.1.2022 


பார்வையில் காணும் செயல்முறைகளின் மூலம் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டது. மேற்படி மாறுதல் விண்ணப்பங்கள் சார்பாக கல்வி தகவல் மேலாண்மை முகமை (EMIS Online) யில் பதிவேற்றம் செய்ய மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 10.1.2022 அன்று பிற்பகல் 5 மணி வரை இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது. 
பள்ளிக்கல்வி ஆணையருக்காக 

பெறுநர் 

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் மூலமாக) நகல் தொடக்கக் கல்வி இயக்குநர் சென்னை-6 நகல் சம்மந்தப்பட்ட இணை இயக்குநர்கள் நகல்:EMIS ஒருங்கிணைப்பாளர், மாநில திட்ட இயக்ககம்சென்னை-6


No comments:

Post a Comment