சமையல் குறிப்பு : ஓட்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி? - துளிர்கல்வி

Latest

Tuesday, March 22, 2022

சமையல் குறிப்பு : ஓட்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி?

சமையல் குறிப்பு : ஓட்ஸ் சாண்ட்விச் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்: 
ஓட்ஸ் – அரை கப்
புதினா, கொத்தமல்லி – ஒரு கட்டு
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு , 
தக்காளி , 
பச்சைமிளகாய் - 2
பெரிய வெங்காயம் – 3
வேக வைத்த பச்சை பட்டாணி – கால் கப்
கேரட் – 1 (பொடியாக துருவவும்)
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஓட்ஸை பத்து நிமிடம் கொதிநீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும்.
கேரட் வெந்ததும் பின் அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, வேக வைத்த பச்சைப் பட்டாணி கலந்து கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், ஊற வைத்த ஓட்ஸ், உப்பு கலந்து சுருள வதக்கவும்.
கொத்தமல்லி, புதினா கலந்து இறக்கவும். பிறகு டோஸ்டு செய்த ப்ரெட் ஸ்லைஸ் நடுவே இந்தக் கலவையை வைத்துப் பரிமாறவும்.....!🎈🧸🎈

No comments:

Post a Comment