கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, March 18, 2022

கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

 கோடை விடுமுறையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

தற்போது நடக்கும் கவுன்சிலிங் முடிந்ததும், காலியிடங்களை கணக்கிட்டு, மீண்டும் கோடை விடுமுறையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடத்த, கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது தான் மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது!. இதற்கு, பலமுறை அட்டவணை மாற்றப்பட்டதால், பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அரசுப்பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை காரணமாக, புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டிய நிலை உள்ளது. விரைவில், புதிய நியமனங்கள் நடக்கும் என, அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கு முன், அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள, உபரி ஆசிரியர்களை அரசுப்பள்ளிகளுக்கு இடமாறுதல் வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, கோடை விடுமுறையில் மீண்டும், கலந்தாய்வு நடத்த, புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் போதிய மாணவர்கள் இன்றி, உபரியாக உள்ள ஆசிரியர்களை, அந்தந்த மாவட்டத்திற்குள் பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, மாவட்ட வாரியாக, உபரி ஆசிரியர்கள் பட்டியல் பெறப்பட்டு வருகிறது. இப்பணிநிரவலுக்கு பின், தேவைப்படும் ஆசிரியர் எண்ணிக்கையை பொறுத்து, புதிய நியமனம் குறித்த, அறிவிப்பு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.