தினம் ஒரு தகவல் நகைகள் பராமரிப்புக்கு...! - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, April 28, 2022

தினம் ஒரு தகவல் நகைகள் பராமரிப்புக்கு...!

தினம் ஒரு தகவல் நகைகள் பராமரிப்புக்கு...! பொதுவாக நகைகள் வாங்கும் போது பளபளவென ஜொலிக்கும், ஆனால், சரியாக அவற்றை பராமரிக்கவில்லை எனில் பொலிவிழக்க வாய்ப்பு உள்ளது. தங்க நகையை அணிந்து, கழற்றி வைக்கும் போது சோப்பு நுரை அல்லது ஷாம்பூ நுரையில் போட்டு கழுவி, காட்டன் துணியால் துடைத்து பத்திரப்படுத்த வேண்டும். 

மேலும், வெகு நாட்களாக நகையை அணியாமல் பெட்டியில் பூட்டி வைத்திருந்தால் சற்று நிறம் மாறிவிடும். அப்போதும் சோப்பு நுரையில் போட்டு எடுக்க வேண்டும். விசேஷ தினங்களில் மட்டும் உபயோகிக்கும் பெரிய நகைகளை அதற்கென கொடுக்கப்பட்ட பெட்டிகளில் தனி தனியாக வைக்க வேண்டும். ஒன்றோடு ஒன்று உரசினால் தங்கம் தேய வாய்ப்புள்ளது. 

நகைப்பெட்டிக்குள் நகையை வைக்கும் போது சரியான முறையில் வைக்க வேண்டும். சங்கிலி போன்றவற்றை மடங்கும்படி வைத்தால் விரைவில் விட்டுப்போகக்கூடும். தினமும் அணியக்கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்றவை அதிக பயன்பாட்டால் நிறம் மங்கலாம். அப்போது ஷாம்பூ நுரை அல்லது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு எடுத்தால் பொலிவு பெறும். எப்போதாவது பயன்படுத்தும் நகைகளை பெட்டியில் வைக்கும் போது துணியில் சுற்றி வைத்தால் நிறம் மங்காமல் இருக்கும். 

வெள்ளி கொலுசுகள் நாளடைவில் கறுத்துவிடும். அதனை தவிர்க்க பற்பசையை பயன்படுத்தி வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம். அல்லது டிடர்ெஜன்ட் பொடியை மிதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து, ஊற வைத்து சுத்தம் செய்தால் பளபளப்பாகும். மேலும், வெள்ளி பொருட்களில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அவை பளபளப்பாக இருக்கும்