குரூப் - 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, May 11, 2022

குரூப் - 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு சென்னை: குரூப் -2 மற்றும் மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கு சுமாா் 11 லட்சம் போ் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் மே 21ஆம் தேதி குருப் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் நுழைவுச் சீட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது.