கலந்தாய்வுக்கு பின்பு ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பலாம் ஐகோர்ட்டு தீர்ப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, May 18, 2022

கலந்தாய்வுக்கு பின்பு ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பலாம் ஐகோர்ட்டு தீர்ப்பு

தனியார் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு பின்னர் ஏற்படும் காலியிடங்களை கல்லூரி நிர்வாகம் நிரப்பிக்கொள்ளலாம் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகள் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோதி மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிந்த பின்பு ஏற்பட்ட காலியிடங்களை சில தனியார் மருத்துவ கல்லூரிகள் 2019-20, 2020-21, 2021-22-ம் கல்வி ஆண்டில் தாமாக முன்வந்து நிரப்பியது. கலந்தாய்வு மூலம் காலியிடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படாததால் இதற்கு ஒப்புதல் அளிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் மறுத்து விட்டது. 

 இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி கல்லூரிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒப்புதல் அளிக்க வேண்டும் அந்த மனுவில், ‘கலந்தாய்வு மற்றும் மறுகலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்களில் தான் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. எனவே, இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்து அவர்கள் ஏற்கனவே எழுதிய தேர்வு முடிவுகளை வெளியிட உத்தரவிட வேண்டும். வருகிற 19-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 7-ந் தேதி வரை நடைபெற உள்ள தேர்வை எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. வீணாகி விடும் மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- காலியிடங்கள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் தேர்வு குழுவுக்கு தெரிவித்துள்ளது. இந்த இடங்களை நிரப்பாதபட்சத்தில் அவை வீணாகி விடும் என்ற அடிப்படையில் கல்லூரி நிர்வாகங்கள் அவற்றை நிரப்பி உள்ளன. கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு மட்டுமே பொருந்தும். 

ஆயுர்வேதம், சித்தா, ஓமியோபதி போன்ற இந்திய மருத்துவ படிப்புகளுக்கு பொருந்தாது. இந்த விவகாரத்தில் கல்லூரிகள் தங்களது எல்லைக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளன. தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும் எனவே, கலந்தாய்வுக்கு பின்பு ஏற்பட்ட காலியிடங்களில் மேற்கொண்ட மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்க மறுத்த இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்ட மாணவர் சேர்க்கை செல்லும். வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள தேர்வுக்கு மாணவர்களை அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.