மூலிகைப் பயன்கள் - ThulirKalvi

Latest

Search Here!

Monday, May 9, 2022

மூலிகைப் பயன்கள்

 மூலிகைப் பயன்கள் 

 அருகம்புல் பொடி :-

 அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

 நெல்லிக்காய் பொடி :- 

பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது

 கடுக்காய் பொடி :- 

 குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

 வில்வம் பொடி :- 

அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

 அமுக்கலா பொடி :- 

 தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

 சிறுகுறிஞான் பொடி :- 

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

 நவால் பொடி :- 

சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

 வல்லாரை பொடி :- 

நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

 தூதுவளை பொடி :- 

நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

 துளசி பொடி :- 

மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

 ஆவரம்பூ பொடி :- 

 இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

 கண்டங்கத்திரி பொடி :- 

மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

 ரோஜாபூ பொடி :- 

இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

 ஓரிதழ் தாமரை பொடி :- 

ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், 

 ஜாதிக்காய் பொடி :- 

நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

 திப்பிலி பொடி :- 

உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

 வெந்தய பொடி :- 

வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

 நிலவாகை பொடி :- 

 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

 நாயுருவி பொடி :- 

உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

 கறிவேப்பிலை பொடி :- 

கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

 வேப்பிலை பொடி :- 

குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

 திரிபலா பொடி :- 

 வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

 அதிமதுரம் பொடி :- 

தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

 துத்தி இலை பொடி :- 

உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

 செம்பருத்திபூ பொடி :- 

அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

 கரிசலாங்கண்ணி பொடி :- 

காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

 சிறியாநங்கை பொடி :- 

அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

 கீழாநெல்லி பொடி :- 

மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

 முடக்கத்தான் பொடி :- 

மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.

 கோரைகிழங்கு பொடி :- 

தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

 குப்பைமேனி பொடி :- 

 சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

 பொன்னாங்கண்ணி பொடி :- 

உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

 முருங்கைவிதை பொடி :- 

ஆண்மை சக்தி கூடும்.

 லவங்கபட்டை பொடி :- 

கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

 வாதநாராயணன் பொடி :- 


பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

 பாகற்காய் பவுடர் :- 

குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

 வாழைத்தண்டு பொடி :- 

சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

 மணத்தக்காளி பொடி :- 

குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

 சித்தரத்தை பொடி :- 

சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

 பொடுதலை பொடி :- 

பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

 சுக்கு பொடி :- 

ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

 ஆடாதொடை பொடி :- 

சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

 கருஞ்சீரகப்பொடி :- 
சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

 வெட்டி வேர் பொடி :- 
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

 வெள்ளருக்கு பொடி :- 
இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

 நன்னாரி பொடி :- 

உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

 நெருஞ்சில் பொடி :- 

சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

 பிரசவ சாமான் பொடி :- 

பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

 கஸ்தூரி மஞ்சள் பொடி :- 

தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

 பூலாங்கிழங்கு பொடி :- 

குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

 வசம்பு பொடி :- 

பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

 சோற்று கற்றாலை பொடி :- 

 உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

 மருதாணி பொடி :- 
 கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.


 கருவேலம்பட்டை பொடி :- 
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.