பற்களின் மீது உள்ள கறைகள் நீங்க வீட்டு வைத்தியம் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, May 20, 2022

பற்களின் மீது உள்ள கறைகள் நீங்க வீட்டு வைத்தியம்

அன்றாட உணவில் கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு உறங்கும் முன் பல் துலக்க வேண்டும். 

இதனால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். 

இரவு தூங்குவதற்கு முன் ஆரஞ்சு பழத்தின் மேல் தோலை பற்களில் தேய்த்துவிட்டு, மறுநாள் காலை எழுந்தவுடன் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பற்களின் மேற்புறம் மற்றும் உட்புறத்தில் உள்ள கறைகள் நீங்கிவிடும். 

 வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும். பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். மிக முக்கியமாக உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.