பனங்கற்கண்டு சாப்பிடுங்கள் - துளிர்கல்வி

Latest

Monday, June 13, 2022

பனங்கற்கண்டு சாப்பிடுங்கள்

உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும். உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 மேசைக்கரண்டி பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள். 

தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 மேசைக்கரண்டி பனங்கற்கண்டு, 1/2 மேசைக்கரண்டி மிளகுத் தூள் பொடி சேர்த்து அரைத்து பொடி செய்து பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும். தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 மேசைக்கரண்டி மிளகுத்தூள், 1/2 மேசைக்கரண்டி நெய் மற்றும் 1/2 மேசைக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும். 

சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது. 2 மேசைக்கரண்டி வெங்காய சாறு மற்றும் 1 மேசைக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

No comments:

Post a Comment