மாணவர்களுக்கு ஓவிய போட்டி - துளிர்கல்வி

Latest

Saturday, July 9, 2022

மாணவர்களுக்கு ஓவிய போட்டி

என் குப்பை - என் பொறுப்பு மாணவர்களுக்கு ஓவிய போட்டி

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 


கோவை மாநகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் மூலமாக "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துதல், துண்டு பிரசுரங் கள் வழங்குதல், சைக்கிள் பேரணி, தெரு நாடகங்கள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் வாசகம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. 

இதில், ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் ஜூலை 11-ந் தேதி மாலை 5 மணிக்குள் sbmccmc@gmail.com, ceocmc@gmail.com ஆகிய மின்னஞ்சல்களுக்கு தங்களது ஓவியங்கள், வாசகங்களை அனுப்ப வேண்டும். 

அதில் தங்களின் பெயர், முகவரி, கைப்பேசி எண், பள்ளியின் விவரம் ஆகியவற்றை குறிப்பிட வேண் டும். போட்டிகளில் தேர்வு பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment