குரூப்-4 தேர்வு விடை குறிப்புகள் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Wednesday, August 3, 2022

குரூப்-4 தேர்வு விடை குறிப்புகள் வெளியீடு

குரூப்-4 தேர்வு விடை குறிப்புகள் வெளியீடு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பதவிகளில் வரும் 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. 

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.

  இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் (ஜூலை) 24-ந்தேதி நடந்தது. தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள். இந்த நிலையில் இந்த தேர்வுக்கான தற்காலிக விடை குறிப்புகளை www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கான தேர்வு முடிவு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment