ஓமம் தண்ணீரை குடிப்பதால் வரும் நன்மைகள்.. - ThulirKalvi

Latest

Search Here!

Friday, August 12, 2022

ஓமம் தண்ணீரை குடிப்பதால் வரும் நன்மைகள்..

ஓமம் தண்ணீரை குடிப்பதால் வரும் நன்மைகள்..

ஓமத்தில் உள்ள தைமோல் என்னும் உட்பொருள், ஓமத்திற்கு தனித்துவமான சுவையும், மணத்தையும் கொடுக்கிறது.

ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். மேலும் கண் நோய் தொற்றுக்கும் ஓமம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுரையீரலை சுத்தப்படுத்தவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்சனைக்கு ஓம தண்ணீர் நல்ல நிவாரணியாக இருக்கிறது.