மூக்கடைப்பு நீங்க சில எளிய வழிகள் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, September 23, 2022

மூக்கடைப்பு நீங்க சில எளிய வழிகள்

மூக்கடைப்பு நீங்க சில எளிய வழிகள்

👉READ THIS ALSO நன்றாக பசி எடுக்க பாட்டி வைத்தியம்-Grandmother's Remedies for Better Appetite
சளி காய்ச்சலைத் தாண்டி பாடாய்படுத்தி எடுக்கும் விஷயங்களில் முக்கியமானது என்றால் மூக்கடைப்பு தான். படுக்கவும் விடாமல் நிற்கவும் முடியாமல் உட்காரவும் இயலாமல் மூச்சு விடுதலையே சிரமத்துக்கு உள்ளாக்கிவிடும்.

தேவையான பொருட்கள்

கப்பு மஞ்சள் – 20 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 20 கிராம்
வெங்காரம் – 10 கிராம்
சாம்பிராணி – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
சாதிக்காய் – 10 கிராம்
ஓமம் – 5 கிராம்
கிராம்பு – 10 கிராம்
கற்பூரம் – 5 கிராம்


இவையனைத்தையும் கல்வத்திலிட்டு (மருந்து அரைக்கும் குழிக்கல்) எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி உலர்த்திக் கொள்ளவும்.
            
வெளி உபயோகத்திற்கு ஏற்ற மருந்து. தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவற்றிற்கு இம்மாத்திரையை தூள் செய்து பசும் பாலில் கலந்து நெற்றியில் பத்துப்போட மேற்கண்ட பிணிகள் தீரும்.

மேலும் சில எளிய வழிகள்

√ 10 மிளகை இரவில் தேனில் ஊறவைத்து, மறுநாள் காலை அதை வெறும் வயிற்றில் நன்கு மென்று சாப்பிட மூக்கடைப்பு விடும்.

√ கைக்குட்டையில் 2-3 துளிகள் யூக்கலிப்டிக்ஸ் எண்ணெய் விட்டு தொடர்ந்து முகர்ந்து பார்க்க மூக்கடைப்பு நீங்கும். 


√ இளஞ்சூடான நீரில் ஹாட் பேக் ஒத்தடம் கொடுப்பதை போல், மூகம் முழுவதும் ஒத்தடம் கொடுக்கலாம்.
(இளஞ்சூடாகவே கொடுக்க வேண்டும்)

√ ஒமம் விதையை ஒரு துணியில் முடிந்து அதை இன்ஹேலர் போல் முகர்ந்து வர மூக்கடைப்பு விடும்.
(ஓமத்தை கொஞ்சம் துணியில் முடிந்து எப்போதும் கையில் வைத்துக் கொள்ளுங்கள் அவ்வப்போது அதை முகர   நல்ல பலன் தரும் - அனுபவ பலன்.)