நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு!!! - ThulirKalvi

Latest

Search Here!

Friday, September 23, 2022

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு!!!

நீளமான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு!!!


 

முடி உதிர்வு, இயற்கையான நிகழ்வின் ஒரு பகுதியாகும். புதிய முடிகள் வளரும்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே இருக்கும் முடிகள் உதிர ஆரம்பிக்கும். இவ்வாறு அன்றாடம் 50 முதல் 80 முடிகள் வரை உதிர்வது இயல்பானது. இவற்றைவிட அதிகமாக முடி உதிர்ந்தால், அது கவனிக்க வேண்டிய விஷயம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடர்த்தியான அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு வழிகள் :


• புரதச்சத்து நிறைந்த பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• இயற்கையாகவே முடியின் வேர்க்கால்களில் இருக்கும் சுரப்பிகள் எண்ணெய்யை சுரக்கும். இருந்தாலும் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் பூசுவது நல்லது.

• அடிக்கடி தலை வாரினால் முடிகள் உடைவதுடன் அடர்த்தியும் குறையும். நீங்கள் உபயோகிக்கும் சீப்பு, துண்டு, தலையணை உறை போன்றவை சுத்தமாக இருக்க வேண்டும். ஈரமான தலைமுடியை சீப்பு கொண்டு வாருவது கூடாது.


• வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்க வேண்டும். சருமத்தைப் போலவே தலை முடியும் புறஊதாக் கதிர்கள் மற்றும் வாகன மாசுக்களால் பாதிக்கப்படும். எனவே அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

• மன அழுத்தம் அல்லது கர்ப்பம் போன்றவற்றால் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் முடி உதிர்வு, குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு தானாகவே நின்றுவிடும்.

• இறுக்கமான ஜடை, போனிடெயில் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்தும் சிகை அலங்கார முறைகளை தவிர்த்தால், முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெறலாம்