சருமம் வறட்சி நீங்க இயற்கை வழி | Natural way to get rid of dry skin - ThulirKalvi

Latest

Search Here!

Monday, September 26, 2022

சருமம் வறட்சி நீங்க இயற்கை வழி | Natural way to get rid of dry skin

சருமம் வறட்சி நீங்க இயற்கை வழி | Natural way to get rid of dry skin 
 சருமம் வறட்சியா!!! 

 👉 சிலருக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், கடுமையான அரிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக குளிர்காலத்தில் இப்பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். அதுவும் வறட்சியான சருமம் கொண்டவர்கள், அதிகமாக இப்பிரச்சனையால் கஷடப்படுவார்கள்.

 👉 இதற்காக எத்தனையோ மாய்ஸ்சுரைசர்களை மாற்றியும் இருப்பார்கள். ஆனால் எவ்வித பலனும் கிடைத்திருக்காது. மாறாக, நிலைமை மோசமாகித் தான் இருக்கும். 

 👉 இப்பிரச்சனைக்கு இயற்கை வழியில் தீர்வுகளை எளிதில் காணலாம். அதனை தினமும் பின்பற்றினால், சரும வறட்சி நீங்கி, அரிப்புக்கள் தடுக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும் இருக்கும். இயற்கை வழி தீர்வுகள் : 👉 கற்றாழை ஜெல் சரும வறட்சியைப் போக்கி, சருமத்தை மென்மையாக்கும் சக்தியைக் கொண்டவை. எனவே தினமும் இரவில் படுக்கும் போது, சருமத்தில் கற்றாழை ஜெல்லைத் தடவி வர, சரும வறட்சி தடுக்கப்பட்டு, அரிப்புக்களும் நீங்கும்.  


 👉 வைட்டமின் நு கேப்ஸ்யு+லில் உள்ள எண்ணெயை சருமத்தில் தடவி வந்தாலும், வறட்சியினால் ஏற்படும் சரும அரிப்புக்களை முழுமையாகத் தடுக்கலாம்.

 👉 இரவில் படுக்கும் முன், கை, கால்களுக்கு பெட்ரோலியம் ஜெல்லைத் தடவி ஊற வைத்து வந்தால், சருமம் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

 👉 உதட்டைச் சுற்றி வறட்சி அதிகரித்தால், அப்பகுதியில் லிப் பாமை உபயோகப்படுத்துங்கள். அதிலும் தினமும் இரவில் படுக்கும் முன் லிப் பாமைப் பயன்படுத்தினால், வறட்சி தடுக்கப்படும்.

 👉 இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கை, கால்களுக்கு தடவி வந்தால், வறட்சி நீங்கி, சருமத்தில் அரிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். 

 👉 கொக்கோ வெண்ணெய் நல்ல நறுமணத்தை மட்டும் கொண்டிருப்பதில்லை, சருமத்தை ஆழமாகவும் ஈரப்பசையு+ட்டும். எனவே உங்களுக்கு சருமம் அதிகமாக வறட்சி அடைந்தால், இரவில் படுக்கும் முன் கொக்கோ வெண்ணெயை சருமத்தில் தடவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும். 

 Natural way to get rid of dry skin

Dry skin!!!

 👉 Some people experience severe itching if the skin becomes too dry. Many people suffer from this problem especially during winters. People with dry skin also suffer from this problem. 

 👉 Many moisturizers will be substituted for this. But there was no benefit. Instead, the situation will only worsen. 

 👉 You can easily find natural solutions to this problem. If you follow it daily, the dryness of the skin will be removed, itching will be prevented and the skin will be soft. Natural Remedies:

 👉 Aloe vera gel has the power to relieve skin dryness and soften the skin. So apply aloe vera gel on the skin every night while going to bed to prevent skin dryness and relieve itching. Even if the oil in Vitamin Nu Capsule+ is applied on the skin, it can completely prevent skin itching due to dryness.

 👉 Before going to bed at night, if you apply petroleum gel to your hands and feet and soak them, it will prevent the skin from drying out and will increase the softness of the skin. 

 👉 If dryness increases around the lips, use lip balm on the area. Especially if you apply lip balm every night before going to bed, dryness is prevented. Applying coconut oil to your hands and feet before going to bed at night will relieve dryness and prevent itchiness. 

 👉 Cocoa butter not only smells good but also deeply moisturizes the skin. So if you have very dry skin, apply cocoa butter on your skin before going to bed at night. This will give good results.