6 வயது இருந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்கை- மத்திய அரசு - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, February 23, 2023

6 வயது இருந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்கை- மத்திய அரசு

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6 வயது நிரம்பினால் மட்டுமே 1ஆம் வகுப்பு சேர்க்க முடியும் என மத்திய கல்விக் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரு சில பள்ளிகளில் எல்கேஜி வகுப்பு சேர்க்க 4 வயது இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. அதன்படி 1ஆம் வகுப்பு வரும் போது 6 முதல் 7 வயதாகிவிடும். ஆனால் சில பள்ளிகளில் 3 முதல் மூன்றரை வயதில் எல்கேஜி சேர்க்கப்படுகிறதுஅது போல் சில பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அல்லாமல் நேரடியாக 1ஆம் வகுப்பு சேர்க்க தலையை தொட்டு காதை தொட வேண்டும். அவ்வாறு தொட்டு விட்டால் 1ம் வகுப்புக்கு சேர்க்கை நடைபெறும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டுதான். 6 வயதில்தான் கற்றல் திறன் மேம்படும் என்பதால் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அடிப்படை கல்வி 

3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையே உள்ள அடிப்படைக் கல்விக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அடிப்படை கல்வி என்பது 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும், 2 ஆண்டுகள் கொண்ட முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியும் அடங்கும். அனைத்து குழந்தைகளுக்கும் தரமான 3 ஆண்டுகள் மழலையர் கல்வி கிடைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அக்டோபர் 

அதில் ஒரு பகுதியாக கடந்த அக்டோபரில் அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் நாட்டில் மழலையர் கல்விக் குறிக்கோளை அடைய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை 9.2.2023 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது

முதலாம் வகுப்பு 

அதில் பள்ளிக் கல்வியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6 வயதுக்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக் கல்வி முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.3 ஆண்டுகளுக்கு இனி 6வயது நிரம்பிய பிறகே ஒன்றாம் வகுப்பு என்ற உத்தரவை அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. 3 வயதில் குழந்தைகளை ப்ரீகேஜி சேர்க்கலாம், பிறகு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் ப்ரீகேஜி, எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை பயில வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SOURCE NEWS