பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு மறு வாய்ப்பு! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - துளிர்கல்வி

Latest

Thursday, March 16, 2023

பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களுக்கு மறு வாய்ப்பு! பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதத் தவறிய மாண வர்களுக்கு ஜூன் மாதம் உடனடித் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். 

தஞ்சாவூரில் அவர் செய்தியா ளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த 2021 - 22 ஆம் கல்வி யாண்டில் இடைநிற்றல் மாண வர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக இருந்தது. இடை நிற்றல் குழந்தைகளைக் கண்டு பிடித்து நிகழ் கல்வியாண்டில் சேர்த்துவிட்டோம். 

இந்த மாணவர்கள் ஓரிரு நாள்கள்தான் வந்து, மற்ற நாள்கள் வரவில்லை என்றாலும், அவர் களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்க அறிவுறுத்துகி றோம். இடைநிற்றல் மாணவர் களை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதே அர சின் நோக்கம்.


No comments:

Post a Comment