மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - துளிர்கல்வி

Latest

Thursday, March 16, 2023

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

மாநில அளவில் வானவில் மன்றப் போட்டிகள் நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் "பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச்செயல்பாடுகளை ஊக்குவிக்க வெவ்வேறு காலகட்டங்களில் இலக்கியம், கவின்கலை, சூழலியல் உள்ளிட்ட மாணவர் மன்றங்கள் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்தன என்றும் கொரோனா பெருந்தொற்றால் கடந்த சில ஆண்டுகளாக இம்மன்றங்கள் செயல்படாதநிலையில் அவற்றைப் புதுப்பித்து சிறப்பாகச் செயல்பட வழிவகை செய்யப்படும்" என்ற அறிவிப்பினை வெளியிட்டார். 

2022 2023 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மன்றச் செயல்பாடுகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கில் பார்வை (3)-இல் காணும் செயல்முறைகளின்படி இலக்கியமன்றம், திரைப்படங்கள் திரையிடுதல் மற்றும் வானவில் மன்றம் போன்றவற்றை ஒவ்வொரு பள்ளியிலும் நிறுவி ஒவ்வொரு மாதமும் நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment